நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும், உலகில் உள்ள பணக்காரர்கள் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதன்படி, அமெரிக்கா முதல் இந்தியா வரை, 2024 இல் உலகின் டாப் 5 பணக்கார குடும்பங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
வால்டன் குடும்பம் (Walton Family)
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ரீட்டெய்ல் நிறுவனமான வால்மார்ட் (Walmart) வால்டன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகம் முழுவதும் 10,600 க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை இயக்கி வரும் வால்மார்ட் நிறுவனத்தின் பங்குகள் 2024 -இல் 80% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வால்டன் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 172.7 பில்லியன் அமெரிக்க டாலகர்களாக அதிகரித்துள்ளது. இதையடுத்து உலகளவில் பணக்கார குடும்ப பட்டியலில் வால்டன் ஃபேமிலி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அல் நஹ்யான் குடும்பம் (Al Nahyan Family)
சுமார் 324 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த சொத்து மதிப்புடன், அபுதாபியின் அரச குடும்பமான அல் நஹ்யான் குடும்பம் உலகளவில் பணக்கார குடும்ப பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸை அரச குடும்பத்தின் தலைவரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வழிநடத்துகிறார். மேலும், இவர் புதாபியின் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதியாகவும் பணியாற்றுகிறார்.
அல் தானி குடும்பம் (Al Thani Family)
சுமார் 172.9 பில்லியன் டாலர் மொத்த சொத்து மதிப்புள்ள கத்தாரை சேர்ந்த அல் தானி அரச குடும்பம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவர்களுடைய சொத்து மதிப்பில் கால்வாசி பரந்த கடல் எரிவாய் வயல்கள் மற்றும் எண்ணெய் வளங்களில் இருந்தே பெறப்படுகிறது. மேலும், இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹோட்டல்களில் இருந்து காப்பீட்டாளர்கள் முதல் ஒப்பந்ததாரர்கள் வரை வணிகங்களை சொந்தமாக வைத்துள்ளனர்.
ஹெர்ம்ஸ் குடும்பம் (Hermès Family)
சுமார் 170.6 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், ஹெர்ம்ஸ் குடும்பம் உலகளவில் பணக்கார குடும்பம் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. உலகின் மிகப் பழமையான ஆடம்பர பிராண்டான பிரெஞ்சு ஃபேஷன் ஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இவர்களே. இந்த நிறுவனம் உயர்தர ஃபேஷன் மற்றும் ஆபரணங்களுக்கு பெயர் பெற்றது.
கோச் குடும்பம் (Koch Family)
உலக பணக்கார குடும்பம் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த கோச் குடும்பம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 148.5 பில்லியன் டாலர்கள் ஆகும். அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாக கோச் இண்டஸ்ட்ரீஸ் இந்த குடும்பத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
அம்பானி குடும்பம் (Ambani Family)
அம்பானி குடும்பம் சுமார் 99.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2024 ஆம் ஆண்டின் உலக பணக்கார குடும்பம் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் பணக்கார குடும்பம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த குடும்பத்தின் கீழே செயல்பட்டு வருகிறது.