Sun. Dec 22nd, 2024

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேலையில், நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், ‘இப்போது அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியம் வந்து சேரும்’ என்று பேசியிருந்தார்.

அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதேப்போல தவெக தலைவர் விஜயும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *