வேலூரில் சாரை பாம்புகள் 2, பின்னிப் பிணைந்து ஆனந்த நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வேலூர் மாநகர் வேலப்பாடி பகுதியில் உள்ள சுடுகாடு அமைந்துள்ள கால்வாயில் சுமார் 10 அடி நீளம் கொண்ட இரண்டு சாரை பாம்புகள்
பின்னி பிணைந்து ஆனந்தமாய் நடனம் ஆடியது அப்பொழுது அந்த இரண்டு பாம்புகளும் சுமார் 4 அடிஉயரம் எழும்பி இரு பாம்புகளும் இணைந்த நிலையில் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருந்தன.
அந்த வழியே சென்ற சிலர் இதனைப் பார்த்து அங்கேயே வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றனர் இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து எராளமானவர்கள் திரண்டுவந்து இந்த அரிய காட்சியை கண்டு மெய்மறந்து பாரத்து ரசித்து நின்றனர் நின்றனர்.
மேலும், அமாவாசை தினத்தில் இதுபோன்று பாம்புகள் கூடி ஆனந்த தாண்டவம் ஆடுவது வழக்கம் இந்த சமயத்தில் யாரும் இந்த ஆனந்த நடனம் ஆடும் பாம்புகளை கலைத்துவிடக்க்கூடாது.
அப்படி செய்தால், அது நாகதோஷம் ஆகிவிடும்.
மேலும், இருபாம்புகளும் கடுமையான கோபமும் ஏற்பட்டு சாபம் இடும் என்று அங்கு கூடி நின்ற பெரியவர்கள் பேசிக்கொண்டனர்.
இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இந்த காட்சியை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.