வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் முக்கியமான மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நடிகை வரலட்சுமி – நிக்கோலாய் சச்தேவ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி மும்பையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகை வரலட்சுமி – நிக்கோலாய் ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
அதன் தொடர்ச்சியாக தான், சென்னை நட்சத்திர ஓட்டலில் கடந்த 1 ஆம் தேதி இவர்களின் மெகந்தி பங்சனானது ஆட்டம், பாட்டம் என மிகவும் கலர்புல்லாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த திருமண கெமந்தி நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். அதே போல், நேற்று மாலை சென்னையில் உள்ள இன்னொரு நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்ச்சையாக நடந்தது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்வில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ் என பெரும் அரசியல் பட்டளமே கலந்துகொண்டு மனமக்களை மனதார வாழ்த்தினார்கள்.
இந்த நிலையில் தான், நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் – மும்பை கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவுக்கும் ஜூலை 10 ஆம் தேதி தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்து.
அதன்படி, திருமணமானது காலையில் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்று மாலையில் மணமக்கள் இருவருமே திருமண உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, அன்றைய இரவு அதே கடற்கரையில் அழகான ரொமாண்டிக் கொண்டாட்டமும் நடந்திருக்கிறது.
இந்தத் திருமண விழாவில், நடிகர் சரத்குமார் மற்றும் மணமகன் வீட்டாரின் மிக நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது, வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.