“என் காதலனால் நான் ஏமாற்றப்பட்டேன், காதலனை நம்பியே மோசம் போனேன்” என்று, நடிகை வித்யா பாலன் அதிரடியாக கூறி உள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “பிரினீதா” படத்தின் மூலம் வித்யா பாலன் நடிகையாக அறிமுகமானர்.
அதன் தொடர்ச்சியாக, “பா”, ”கஹானி” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து அதன் மூலம் அவர் மேலும் பிரபலம் அடைந்தார். ஆனாலும், அவரது சினிமா கேரியருக்கு “தி டர்ட்டி பிக்சர்” படம் தான் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன் மூலமாகவே அவர் சினிமாவில் புகழ் மகுடத்தை சூடினார்.
இந்நிலையில் தான், தனது வாழ்க்கையில் தனக்கு நடந்த மிக மோசமான சம்பவம் குறித்து தற்போது அவர் பேசி உள்ளார். “நான் எனது காதலனால் ஏமாற்றப்பட்டேன். என் முதல் காதலன் என்னை ஏமாற்றி விட்டார்.” என்று கூறினார்.
“அதாவது, நான் கல்லூரி படித்து வந்த போது ஒருவரை காதலித்தேன். காதலர் தினத்தன்று, அவன் என்னிடம் அவ்வளவு தைரியமாக, தனது முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல போவதாக கூறினான். நான் அப்படியே அதிர்ந்து நின்றேன். அப்போதே நான் நொறுங்கி உடைந்து விட்டேன். அதன் பிறகு, நாங்கள் பிரிந்து விட்டோம்.
வாழ்க்கையில் நான் இப்போது அதை விட மிக சிறப்பான இடத்தில் இருக்கிறேன்” என்று, வேதனையுடன் தெரிவித்தார்.
இதனிடையே, நடிகை வித்யா பாலன், நடிகர் ஷாஹித் கபூருடன் டேட்டிங் சென்றதாக முன்னதாக வதந்தி பரப்பப்பட்ட நிலையில், சித்தார்த் ராய் கபூர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு, தற்போது நடிகை வித்யா பாலன், மகிழ்ச்சி உடன் வாழ்ந்து வருகிறார்.