நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், விஜய்க்கா செய்த செயல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.
நடிகர்களை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள், அந்த தலைவனுக்காக, அம்மா – அப்பாவையும் தாண்டி, இன்னும் அதிகமாக நேசிப்பார்கள். அவ்வளவு ஏன் ஒரு நடிகனை கடவுளாக நினைக்கும் மனபாவம் கூட ரசிகனுக்கு உண்டு. இதற்கு, நிறைய உதாரணங்கள் இப்போது இருக்கிறது.
அதன் ஒரு சாட்சியாகதான் திருப்பத்தூரில் நடிகர் விஜயின் ரசிகர் ஒருவர் செய்த அனைவரையும் மெய் சிலர்க்க வைத்திருக்கிறது.
தரணி இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற “கில்லி” திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது.
கிட்டதட்ட 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ள இத்திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே டிக்கெட் முன் பதிவில் மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கும் இந்த படம், ரீலிஸ்லும் முதல் நாளில் வசூலிலும் மீண்டும் சாதனை படைத்திருக்கிறது.
“கில்லி” மீண்டும் வெளியாகி இருக்கும் குஷியில் உள்ள விஜய் ரசிகர்கள், ஆர்வ மிகுதியில் சில வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரியைில், திருப்பத்தூர் ஜடையனூர் பகுதியை சேர்ந்த என்பவர் கதிர்வேல் என்ற நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், “கில்லி” ரீ ரிலீஸை ஓட்டி, நடிகர் விஜய்யை பற்றி, 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட ஒரு முழு கவிதையை எழுதி புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்த சாதனையை, கேரள மாநிலத்தை சேர்ந்த யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்து தற்போது விருதுயையும், சான்றிதழ்களையும் வழங்கி இயிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய கதிர்வேல், “நடிகர் விஜய்யின் மீது தான் கொண்ட அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தவே, இந்த கவிதையை எழுதியிருப்பதாக” நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார்.