Mon. Dec 23rd, 2024

GOAT பாடல் சர்ச்சை.. பஞ்சாயத்தில்  மீண்டும் சிக்கிய விஜய்!

By Aruvi Apr15,2024

GOAT பட பாடலில் சர்ச்க்குறிய வரிகள் இடம் பெற்றுள்ள புகார் எழுந்துள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல் எழுந்து உள்ளது.

தமிழ் சினிமா சமீபத்தில் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் GOAT.

கோலிவுட்டின் டாப் மோஸ்ட் ஹீரோவா வலம் வரும் தளபதி விஜயின் படங்கள் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு ஏற்றார் போல், அவரது படங்கள் வரிசைக்கட்டி சர்ச்சையில் சிக்குவதும் சமீப காலமாக வாடிக்கையாகி விட்டது.

விஜய் படங்கள் என்றாலே, தொட்டதுக்கெல்லாம் கேஸ் போட்டு அவர டார்க்கெட் பண்றதே இன்றைய சமூக ஆர்வலர்களோட அன்றாட வேலையாகிவிட்டது என்ற சர்ச்சையும் இன்னொரு பக்கம் எழுந்திருக்கிறது.

முக்கியமாக, “விஜய்யோட படங்கள் வரப்போகிறது, பத்தின பற்றிய முகு்கிய அப்டேட் வரப்போகிறது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர் என்று எது ரிலீஸ் ஆனாலும், அதில் ஒரு கேஸ் போட முடியுமா? அதில் ஒரு குற்றம் கண்டுப்பிடிக்க முடியுமா?” என்றும், பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்?

அதை உறுதி செய்யும் விதமாக, இப்போது “கோட்” படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான ஒரே நாளில், ஒரு புதிய பஞ்சாயத்தாகி இருக்கிறது.

அதாவது, தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக “கோட்“ படத்துல இருந்து விசில் போடுங்குற சாங் நேற்று ரிலீஸாகி பட்டையை கிளப்பியது. “வியின் இந்த பாடலில் சர்ச்சையான வரிகள் இருக்குறது” என்று கூறி, சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் தற்போது புதிய புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.

அந்த புகாரில், “நடிகர் விஜய் பிரச்சினைகளை தூண்டுற மாதிரியும், போதை பொருட்கள் யூஸ் பண்ண என்கரேஜ் பன்ற மாதிரியும் நடித்துக்கொண்டு வர்றார் என்றும், நாட்டில் கலவரத்த தூண்டுகிற மாதிரியாகவும், மதுப் பழக்கத்துக்கு சப்போர்ட் பண்ற மாதிரியும் அவர் பாடல் பாடிருக்கார்” என்றும், கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார்.

அத்துடன், “ரொம்ப முக்கியமா பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமான்னு பாடல் வரிகள் வர்ற இடத்துல, விழிப்புணர்வு வாசகம் வைக்கலன்னும்” சொல்லி தற்போது பஞ்சாயத்து கிளப்பட்டு இருக்கிறது.

படத்தின் பாடல் வரிகளான “அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா?” போன்ற வரிகள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்களோட ரவுடியிசத்துக்கு சப்போர்ட் பண்றதா இருக்கிறது என்றும்,  “மைக்கை கையில் எடுக்கட்டுமா? லைன் சீமான், நடிகர் கமல், மன்சூர் அலிகான் போன்ற நடிகரை சுட்டிக்காட்டும் வகையில் இருக்குறதாகவும்” புகாரில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

“இடி இடிச்சா என் வாய்ஸ் தான்.. வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்..” ன்னு தன்னோட ரசிகர்கள உசுப்பேத்தி விதமாக நடிகர் விஜய் பாடி உள்ளதாகவும், “ரத்த வெறியையையும், ஏத்தி விடுறதாவும்” சமூக ஆர்வலர் விஜய் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னதாக, இதே மாதிரி தான் “லியோ” படத்துல இருந்து ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் ரிலீஸானப்போதும் இப்படியான ஒரு சர்ச்சை எழுந்தது. “இந்தப் பாட்டுல தண்ணி, தம்முன்னு இஷ்டத்துக்கு விஜய் பாட, அது கேஸ் ஆகி பின்பு, அந்த வரிகள் நீக்கப்பட்டது. தற்போது, “கோர்ட்” பட பாடல் வரிகளும், அதே வரிசையில் சர்ச்சையில் சிக்கி உள்ளது, நடிகர் விஜயக்கு புதிய சிக்கலை உண்டாக்கி உள்ளது குறிப்பிட்டதக்கது.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *