Mon. Dec 23rd, 2024

“2026 ஆம் ஆண்டு தேர்தலில் நானும் போட்டியிடுவேன்” நடிகர் விஷால் அதிரடி

By Aruvi Apr15,2024

“விரைவில் அரசியலில் குதிப்பேன் என்றும், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நானும் போட்டியிடுவேன்” என்றும், நடிகர் விஷால் அதிரடியாக பேசி உள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “என் 25 ஆண்டு கனவு நிறைவேறப்போகுது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “துப்பறிவாளன்-2 பாகம் மூலம், இயக்குநராகவும் அறிமுகமாகப் போகிறேன். வரும் 26 ஆம் தேதி ஹரி இயக்கத்தில் நான் நடித்த ரத்னம் ரிலீஸ் ஆகிறது” என்றார்.

அத்துடன், “நடிகர் விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டேன் என்றும், அவர் மானேஜரை தொடர்பு கொண்டு நான் அவருக்கு கதை சொல்லணும்னு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன் என்றும், எதிர் தரப்பில் இன்னும் சரியான பதில் வரவில்லை என்பதால், அது அப்படியே நின்றுவிட்டது” என்றும், தெரிவித்தார்.

பின்னர், “திருமணம்” குறித்தான கேள்விக்கு பதில் அளித்து பேசிய விஷால், “நடிகர் சங்க கட்டடம்கிறது சாதாரண விஷயமில்லை. ரொம்ப பெரிய பணி. நல்லபடியா வேலைகள் போய்க்கிட்டிருக்கு. அடுத்த வருஷம் முடிஞ்சுடும். சங்க உறுப்பினர்கள் வீட்டு கல்யாணங்களை இலவசமா நடத்திக்கிற மாதிரி மினி கல்யாண மண்டபமும் கட்டுறோம். இப்போதைக்கு ரத்னம் பட ரிலீஸுக்கான வேலைகள். அடுத்து நான் இயக்கப்போற துப்பறிவாளன் 2 படத்துக்கான வேலைகள்ல கவனம் செலுத்த வேண்டியிருக்கு. நடிகர் சங்க கட்டடம் சார்ந்து நிறைய பொறுப்புகள் இருக்கு. இந்த விஷயங்களை முடிச்சபிறகுதான் கல்யாணம் பத்தி சிந்திக்கணும்” என்று கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, “உங்களின் அரசியல் பயணம் எப்போது?” என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், “இப்போது சமுதாய பணி மற்றும் எனது திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். வரும் 2026 ஆம் ஆண்ட தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் இருக்கும்” என்றும், அதிரடியாகவும் ஓபனாகவும் விஷால் பேசினார்.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *