கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த இரண்டாம் ஆண்டு மாணவி கல்லூரியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
மாணவி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வரும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற மாணவி தேர்வு எழுத இன்று கல்லூரிக்கு வந்துள்ளார். பிறகு கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து திடீரென தற்கொலைக்கு முயன்ற ஆயிஷா கீழே குதித்துள்ளார் மிகுந்த காயங்களுடன் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தேனாம்பேட்டை போலீசார் முதற்கட்ட விசாரணையில் தேர்வு எழுத வந்த ஆயிஷா தனது விடைத்தாளில் கடந்த இரண்டு வருடங்களாக சகோதரி இறந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தாம் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாகவும் எழுதி வைத்துவிட்டு கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு உண்மையான காரணம் யார் எதற்காக அவர் மாடியில் இருந்து கீழே குதித்தார் என்று குறித்து தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.