Tue. Jul 1st, 2025

நடிகை விஜயலட்சுமி விவகாரம்.. சீமான் வழக்கில் இன்று நடந்தது என்ன?

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்.. சீமான் மீதான வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, இரு தரப்பிலும் விதாங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்தான முழு விவபரங்களையும் தற்போது பார்க்கலாம்..

அதாவது, நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது.

நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் இது தொடர்பான விசாரணை நடைபெற்ற நிலையில், சீமான் தரப்பு ஆஜரான வழக்கறிஞர், “ஏற்கனவே, இந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.

ஆனால், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வழக்கு கொடுத்து உள்ளார்” என்றார்.

குறிப்பாக, “இதற்கு முன்னர் 3 முறை வழக்கை திரும்ப பெற்றுள்ளார். புதிதாக அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காரணமாக இது மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது” என்று, வாதிட்டார்.

வாதத்தை கேட்ட உச்ச திமன்றம் ,இந்த விவகாரத்தில் இடைப்பட்ட காலத்தில compensation வழங்குவது குறித்து, இரு தரப்பும் பேசி முடுவெடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், அடுத்த 12 வாரங்களில் விசாரணை மேற்கொண்டு அறிக்கையில் தாக்கல் வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரத்தில் சீமான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், 3 முறை இது வரை வழக்கை திரும்பப் பெற்று உள்ளார்” என்றும், சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “இருதரப்புக்கும் இடையே settlement அடிப்படையில் முடிவு எட்டப்படுமா என பார்க்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறி, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, சீமான் தரப்பில், “முன்னதாக தடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் இருந்தது என்றும், அதன் பின்னர் இருவரும் பிரிந்தோம் என்றும், ஏற்கனவே தமக்கு எதிராக இது போன்று புகார் கொடுத்து விட்டு வழக்கை திரும்ப பெற்றார் என்றும், தற்போது மீண்டும் புகார் அளிக்கிறார் என்றும், இது வேண்டும் என்றே harass செய்வதாக உள்ளது” என்றும், வாதிடப்பட்டது.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரையில் எதிர் தரப்பு மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளாரே? அதனை கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும், கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு வரும் மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *