உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் ஆப்களில் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியும் ஒன்று. அதுவும், இந்த கொரோனா லாக்டவுனிற்கு பிறகு குழந்தைகளும் இந்த ஆப்பை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பயனர்களுக்கு சிறந்த யூசர் எக்ஸ்பீரியன்ஸை கொடுக்க வேண்டும் என்பதற்காக WhatsApp நிறுவனம் செயலியில் பல புதிய வசதிகளை அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது.
அப்படி வாட்ஸ்அப் யூசர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு சூப்பரான வசதியை தான் வாட்ஸ்அப் கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, எதிர்ப்புறம் சாட் செய்பவர் எந்த மொழியில் சாட் செய்தாலும் அதை நமது விருப்பத்திற்கு ஏற்ற மொழியில் மொழிபெயர்ப்பு (translation) செய்துக் கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புது அப்டேட்டின் மூலமாக மேலும் பல புதிய யூசர்களை வாட்ஸ்அப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு 2.24.26.9 வெர்சனில் பீட்டா சோதனையில் உள்ளது. மேலும், யூசர்களின் பிரைவசியை பாதுகாக்கும் வகையில், இந்த மொழிபெயர்ப்பு செயல்முறையானது முழுக்க முழுக்க அந்தந்த யூசர்களின் டிவைஷுகளுக்கு உள்ளாகவே நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கமாக இதுபோன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் போது யூசர்களின் மெசேஜ் ஒரு கிளவுட் சர்வருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிறகே எதிர்புறம் இருப்பவருக்கு அந்த மெசேஜ் சென்றடையும்.
ஆனால், வாட்ஸ்அப்பில் வரவுள்ள இந்த புதிய மொழிபெயர்ப்பு வசதியில் மூன்றாம் தரப்பு (third party) செயலிகள், சர்வர்கள் என எதுவும் பயன்படுத்தாமல், யூசர்களின் மொபைலில் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்துள்ள லாங்குவேஜ் பேக்குகளை கொண்டே மொழிபெயர்ப்பு செய்யப்படும். இதன் மூலம் யூசர்கள் அனுப்பும் மெசேஜ்கள் சர்வருக்கு செல்லாமல் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (end to end encryption) செய்யப்படுகிறது. எனவே, பிரைவசி பற்றிய கவலையே வேண்டாம்.