மும்பையில திருமண என்கேஜ்மென்ட் செய்த நடிகை வரலட்சுமி சென்னையில திருமண ரிசப்ஷன் வைத்ததில் சரத்குமார் குடும்பமே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.
நடிகை வரலட்சுமி – நிக்கோலாய் சச்தேவ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி மும்பையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகை வரலட்சுமி – நிக்கோலாய் ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
இந்த நிலையில் தான், சென்னை நட்சத்திர ஓட்டலில் கடந்த 1 ஆம் தேதி இவர்களின் மெகந்தி பங்சனானது ஆட்டம், பாட்டம் என மிகவும் கலர்புல்லாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த திருமண கெமந்தி நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். அதே போல், நேற்று மாலை சென்னையில் உள்ள இன்னொரு நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்ச்சையாக நடந்து முடிந்து உள்ளது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்வில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ் என பெரும் அரசியல் பட்டளமே கலந்துகொண்டு, மனமக்களை வாழ்த்தினர்.
அதே போல், திரைப்பட இயக்குனர்களான பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், பாலா, நடிகர்கள் சிவகுமார், ஜாக்கிஷெராப், சுதீப், பாலகிருஷ்ணா, நாசர், மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, சித்தார்த், மணீிரத்னம், சுகாசினி, ரோஜா செல்வமணி, குஷ்பு உட்பட ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகிட்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் நடிகை வரலட்சுமியின் திருமணம் எங்கே என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், திருமணமானது ஜூலை 10 ஆம் தேதி தாய்லாந்தில் நடக்கப்போகிறது என்றும் தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.