“வேள்பாரி” கதை ரெடி ஆனால், ஹீரோ ரெடி இல்லை என்றும், “இந்தியன்-2” வில் சித்தார்த் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது என்றும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்து உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் – இயக்குனர் ஷங்கர் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள “இந்தியன்-2” படம், வரும் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு. இன்று “இந்தியன்-2” திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று பேசிய இயக்குனர் ஷங்கர், “ “இந்தியன்-2” வில் சித்தார்த் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கால்ஷீட் உட்பட பல விஷயங்களால் அது நடக்கவில்லை” என்று, கூறியுள்ளார்.
“ “இந்தியன்-2” 2-வில், ஹீரோயினாக நடிக்க நயன் தாராவிடம் முதலில் பேசினோம். கால்ஷீட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காஜல் அகர்வால் நடித்தார்” என்றும், இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார்.
குறிப்பாக, “ “வேள்பாரி” கதையின் மூன்றாம், பாகம் ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கிறது. ஆனால், இன்னமும் ஹீரோ முடிவாகவில்லை” என்றும், இயக்குனர் ஷங்கர் பேசினார்.
முன்னதாக, “ ‘இந்தியன்-2’ படத்தில், இந்தியன் தாத்தாவுக்கு என்ன வயசு? என கேள்வி வருது. இந்தியன் தாத்தா தியானம், உணவு கட்டுப்பாடு கொண்டவர். அவருக்கு ஏஜ் தடையில்லை என்பது போல பார்க்கணும். கமல் கேரக்டர் என்பது, நம் மனதில் உள்ள கோபம், ஆதங்கம் தான்” என்று, இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.