பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொன்றது யார்? பழிக்குப் பழியாக இந்த கொலை நடைபெற்றுள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் சார்ந்த கமியூனிட்டி மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றவராக அறியப்பட்டார். வழக்கறிஞர் ஆன இவர் மீது தொடக்கத்தில் கொலை மற்றும் ஆள் கடத்தல் என 10 வழக்குகள் நிலுவையில் இருந்தது. ஆனால், அனைத்து வழக்குகளையும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு, அதிலிருந்து முறைப்படி வெளியே வந்தார்.
இதனையடுத்து, எப்பொழுதும் துப்பாக்கி உடனே இருக்கும் ஆம்ஸ்ட்ராங், தனது வீட்டில் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தாலும், இடுப்பில் துப்பாக்கியை வைத்திருப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்து உள்ளார்.
ஆனால், முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிப்படி துப்பாக்கியை காவல் துறையிடம் அவர் ஒப்படைத்து உள்ளார். துப்பாக்கி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த துப்பாக்கியை அவர் மீண்டும் பெறப்படாத நிலையில் தான் நேற்று இரவு வீட்டு வாசலில் துப்பாக்கி இல்லாமல் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளார்.
இந்த நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங்கிடம் துப்பாக்கி இல்லை என்பதை கடந்த இரண்டு மாதங்களா நோட்டமிட்டு கண்காணித்து அறிந்து கொண்ட கொலை கும்பல், நேற்று இரவு ஆம்ஸ்ட்ரங்கை கொடூரமான முறையில் படுகொலை செய்து உள்ளனர்.
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்காகன காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு, முன்னதாகவே ஆற்காடு சுரேஷின் தம்பி மற்றும் அவரது கூட்டளிகள் சேர்ந்து சபதமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை திட்டுமிட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்காக, அவர்கள் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2 மாதங்களாக நோட்டம் மிட்டு வந்திருக்கிறார்கள் என்றும், அதன்படி ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்வையிட தினமும் மாலை 6 அணி அளவில் அவர் செல்வதை நோட்டமிட்ட கொலை கும்பல் அங்கு வைத்து, ஸ்கெட்ச் போட்டு அவரை ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டி உள்ளனர்.
இந்த நிலையல் தான், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில்