கணவனின் கிட்னியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்று, பணத்துடன் ஃபேஸ்புக் காதலனோடு சுகபோகமாகய் வாழ ஆசைப்பட்டு மனைவி ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்சியான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மேற்கு வங்கம் ஹவுரா மாவட்டத்தில் இருக்கும் சங்க்ரெய்ல் என்னும் பகுதியில் மிகவும் ஏழ்மையான நிலையில், கணவன் – மனைவி வசித்து வந்து உள்ளனர். இருவரும் அன்றாட செலவுக்கும், அன்றாட சாப்பிட்டிற்கும் மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அந்த மனைவி வீட்டில் உள்ள வறுமையை காரணம் காட்டி, கணவனை சிறுநீரகத்தை விற்று பணம் கொண்டு வருமாறு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வற்புறுத்தி வந்து உள்ளார். ஒரு கட்டத்தில், மனைவியின் அழுத்தம் அதிகமாக இருந்து உள்ளது.
கூடவே, இந்த தம்பதிக்கு 10 வயதில் மகளும் உள்ளார். அந்த 10 வயது மகளின் வருங்கால திருமணம், குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வது என்று, பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, கணவனுக்கு அந்த மனைவி தினமும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்து உள்ளார்.
இப்படியாக, மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் கணவனும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, கடந்த ஒரு வருடமாக சிறுநீரகத்தை விற்பது தொடர்பாகவும், அதனை வாங்குபவரையும் அந்த கணவன் தேடி வந்து உள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனது சிறுநீரகத்தை 10 லட்சத்திற்கு அந்த அப்பாவி கணவன் விற்று உள்ளார். ஆனால், அதன் பிறகு அவரது மனைவி, தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று வந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனுடன் உடன் சுகபோகமாய், சொகுசாய் வாழ ஆசைப்பட்டு, அவருடன் வீட்டை விட்டும், 10 வயது பெண் குழந்தையை விட்டும் ஓட்டம் பிடித்திருக்கிறார்.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த அப்பாவி கணவன், தனது மனைவியை தேடி அலைந்து உள்ளார். ஒரு கட்டத்தில், அங்குள்ள பராக்பூரில் தனது மனைவி, அவளது ஃபேஸ்புக் காதலுடன் வசித்து வருவதை அறிந்து, அங்கு சென்று உள்ளார்.
ஆனால், அங்கு பல முறை தனது மனைவியிடம் பேசியும் துளியும் மனசு மாறாத அந்த பெண், “விரைவில் விவாகரத்து நோட்டிஸ் வழங்குகிறேன், இப்போது நீ இங்கிருந்து செல்” என்றும், அந்த கணவனை விரட்டி உள்ளார். இதனால், கடும் மனமுடைந்த அந்த அப்பாவி கணவன், அங்குள்ள காவல் நிலையில் “தன் மனைவியை தன்னும் சேர்த்து வைக்கும் படி” புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் “மனைவி, கணவனின் சிறுநீரகத்தை விற்று பணத்துடன், ஃபேஸ்புக் காதலுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம்” அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.