ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ENCOUNTER தொடரும் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நபர்கள் “எங்களையும் என்கவுண்டர் செய்ய உள்ளதாக” நீதிபதியிடம் கதறி உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது எப்படி? கொலைக்கு பணம் கை மாறியதும் எப்படி? என்று பல்வேறு தகவல்கள் குறித்து போலீசாரின் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கோடிகள் புழங்கும் ஸ்கிராப் பிசினஸ்க்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கூடவே, சம்போ செந்திலுக்கு இதில் தொழில் போட்டி இருந்து வந்ததா என்பது குறித்தும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே ஒரு ENCOUNTER நடந்து உள்ளது. அத்துடன், இந்த வாரத்தில் சில ENCOUNTER நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது.
குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்த வரையில், முதல்கட்டமாக சரணடைந்த 8 பேரும் அடுத்தடுத்து ENCOUNTER செய்யப்படுவார்கள் என்று, செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் தான், இன்று குற்றவாளிகள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நபர்கள் “எங்களையும் என்கவுண்டர் செய்ய உள்ளதாக” நீதிபதியிடம் கதறி உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோர் “திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தது போல தங்களையும் என்கவுண்டர் செய்ய உள்ளதாக” நீதிபதியிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, உதவி ஆணையரை எச்சரித்த நீதிபதி, உத்திரவாத கையெழுத்து பெற்று பிறகே குற்றவாளிகளை விசாரிக்க போலீஸ் கஸ்டடி கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதாவது, “எப்படி அழைத்து செல்கிறீர்களோ? அதே போல நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். உடம்பில் சிறு காயம் கூட ஏற்படகூடாது. சரியான நேரத்தில் சாபாடு வழங்க வேண்டும்” என்று, உதவி ஆணையர் சரவணனை எச்சரித்து உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு அதன் பிறகே, மூவருக்கும் போலீஸ் கஸ்டடி கொடுத்து உள்ளார் மேஜிஸ்ட்ரேட் ஜெகதீசன்.
அதன்படி, பொன்னை பாலு, ராமு (எ) வினோத், அருள் ஆகிய நபர்களுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அதே போல், வழக்கறிஞர் ஹரிஹரனுக்கு ஐந்து நாட்கள் போலீஸ் காவல் கொடுத்து நீதிபதி ஜெகதீசன் இரண்டு ஆர்டர்கள் பிறபித்து உள்ளார்.