தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பொது மக்களின் தற்போதைய மனநிலை குறித்து இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தியது.
அதன்படி, “தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 343 தொகுதிகளை கைப்பற்றலாம்” என்று, தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதே போல், “பாஜக தனிப் பெரும்பான்மை பெறும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 188 இடங்களை மட்டுமே கைப்பற்றும்” என்றும், தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.
அத்துடன், “தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணியே 39 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்றால் 52 விழுக்காடு வாக்குகளைக் கைப்பற்றலாம்” இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளது.
அதே போல், அதிமுக -வின் கூட்டணி வாக்குகள் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது 3 சதவீதம் சரிந்து உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளதாக, இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.