“அதிமுகவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா?” என்ற கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மழுப்பலாக பதில் அளித்துள்ளது, அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து உள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சியின் அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு உணவு அளித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துக்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அளித்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை இந்த முறை தமிழக அரசில் பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்தததற்காக பட்ஜெட்டை ஆதரித்ததாக தெரிவித்தார்.
அத்துடன், “தமிழக அரசின் கடந்த நான்காண்டு செயல்பாடுகளை பொறுத்தவரை நிறை குறை என இரண்டும் கலந்ததாக இருப்பதாக தெரிவித்தார்.
கூட்டணியை ஒருங்கிணைப்பதில் திமுகவை போல அதிமுகவின் செயல்பாடு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும்” என்றும், கூறினார்.
மேலும், “அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா இடம் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே கூட்டணி சமயத்தில் எடுக்கப்பட்ட முடிவை தெரிவித்திருக்கிறேன் எனவே தேமுதிக அதிமுக முடிவை பொறுத்திருந்து பார்கக்கும்” என்றும், அவர் மலுப்பலாக பதில் அளித்தார்.
இதனிடையே, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மழுப்பலான பதில், அரசியல் களத்தில் கவனத்தை பெற்று உள்ளது.