கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை, போலீசாரால் தண்ணீரை ஊற்றி அணைத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் இடம் இருந்து மனுக்கள் பெறும் இடத்தில் கலெக்டர் பவன் குமார் மனுக்களை வாங்கிக் கொண்டு இருந்தார். கலெக்டர் அலுவலக வாசல் வழியாக மனு கொடுக்க வரும் பொதுமக்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் தடை செய்யப்பட்ட மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் எடுத்து வருவதை தடுக்க இந்த சோதனை நடந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் இதை மீறி உள்ளே நுழைந்த ஒரு பெண் மனு கொடுக்க செல்லும் இடத்திற்கு முன்பு திடீரென அவர் கொண்டு வந்து இருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முடிந்தால். இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கு நின்ற பெண்போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு அவசர அவசரமாக வெளியில் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர் பொள்ளாச்சி கரட்டுப்பாளையம் சமத்துவ நகரை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் மனைவி நந்தினி என்பது தெரிய வந்தது.
போலீசாரிடம் நந்தினி கூறும் போது, “அரசு பஸ் கண்டக்டர் ஆன தனது கணவருக்கும் விருதுநகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வருவதாகவும் இதனால் அவர் தன்னை விவாகரத்து கேட்டு வருவதாகவும் தனது குழந்தைகளுடன் சிரமப்பட்டு வரும் தனக்கு உதவும் படி போலீசாரிடம் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி புகார் அளிக்கும் நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற முடிவை எடுத்ததாக” கூறி, அந்த பெண் கண்ணீர் வடித்தார்.
அப்போது, மண்ணெண்ணெய் உடலில் இருந்து அகற்றுவதற்காக போலீசார் அவர் மீது சோப்பு ஷாம்பு போட்டு தண்ணீர் ஊற்றி கழுவினர். இதனால் எரியுது, எரியுது என்று அவர் கதறினார். அதன் பிறகு போலீசார் அவரை வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.