Sun. Dec 22nd, 2024

ஒரு படத்தின் கதைக்களத்தை விறுவிறுபாக கொண்டு செல்வதற்கும், ஆடியன்ஸை நகரவிடாமல் செய்வதற்கும் வில்லன் கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் வில்லன்கள் என்றாலே திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது ஹீரோக்களை விட வில்லன் கதாபாத்திரத்தை தான் மக்கள் அதிகம் ரசிக்க தொடங்கியுள்ளனர்.

சமீப காலமாக வில்லன் கதாபாத்திரம் ரசிக்கப்படுவதற்கு முன்னணி நடிகர்கள் பலரும் முதல் முறையாக வில்லன் ரோலில் நடிக்க தொடங்கியுள்ளதே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே, வில்லன்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கிய வில்லன் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

2024ல் அதிக சம்பளம் வாங்கிய வில்லன்கள்:

பாபி தியோல்: சூர்யா நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சமீபத்தில் ரிலீஸான திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்திருந்தார். இதற்காக அவர் ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பகத் பசில்: அல்லு அர்ஜீன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த பகத் பசில் தான் இந்த படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். இதற்காக அவர் ரூ.8 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆர் மாதவன்: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்யாக வலம் வந்த மாதவன், பாலிவுட்டில் கலக்கி வருகிறார். இவர், அஜய் தேவ்கான் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் என்ற ஹாரர், திரில்லர் திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

சைப் அலி கான்: பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களை அதிகம் ஈர்த்த படம் தேவரா. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்க, இவருக்கு வில்லனாக பாலிவுட் சைப் அலி கான் நடித்திருக்கிறார். இதற்காக அவர் சுமார் ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன்: பிரபாஸ் நடித்து இந்தாண்டு பிரம்மாண்டமாக வெளியான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் கல்கி 2898 AD. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் ரோலில் நடித்து மிரட்டியிருப்பார். இந்த படத்தில் கமலின் காட்சி வெறும் 10 நிமிடமாக இருந்தாலும், இதற்காக அவர் ரூ.20 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *